பி.என். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அன்னுவார் மூசாவை நீக்குதல் தொடர்பில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அல்லது தேசிய முன்னணி (பி.என்.) உச்சமன்றத்தால் முடிவு செய்யப்படவில்லை என்று ம.சீ.ச. கூறியுள்ளது.
இந்தச் செய்தியால் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், அதன் செல்லுபடியை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ம.சீ.ச. கூறியது.
“ம.சீ.ச.-வின் கருத்துபடி, பி.என்.-இல் எந்தவொரு பதவி நியமனமும் கூட்டணியின் அரசியலமைப்பு அடிப்படையில் செய்ய வேண்டும், வழக்கமாக இந்த நியமனம் பி.என். உச்சமன்றக் கூட்டத்தில், ஒருமித்த கருத்தினால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்று ம.சீ.ச. கூறியது.
நேற்று, கோலாலம்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் அம்னோ தலைமைக்கும் அதன் பிரிவுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பின்னர், அன்னுவார் பி.என். தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும், அம்னோ தலைமைச் செயலாளர் அஹ்மத் மஸ்லான், அன்னுவார் நீக்கப்படவில்லை, ஆனால் ‘மாற்றப்பட்டார்’ என்றார்.
வழக்கமாக, பி.என். பொதுச்செயலாளர் பதவியை அம்னோ பொதுச்செயலாளர்தான் வகிப்பார் என்றும் அஹ்மத் மஸ்லான் கூறினார்.