‘அம்னோ இப்போது தேசியக் கூட்டணியில் இருக்க வேண்டும்’ தேசிய முன்னணி ஆதரவாளர்கள் விரும்பம்

கண்ணோட்டம் | பெரும்பாலான தேசிய முன்னணி ஆதரவாளர்கள், அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘மெர்டேகா செண்டர்’ நடத்திய ஓர் ஆய்வில், பதிலளித்த தேசிய முன்னணி ஆதரவாளர்களில், 54 விழுக்காட்டினர் அம்னோ அரசாங்கத்திலிருந்து விலகக் கூடாது என்றும், 35 விழுக்காட்டினர் விலக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், அடுத்தப் பொதுத் தேர்தலில், அம்னோ “தனியாகப் போடியிட வேண்டுமா” என்று கேட்கப்பட்டபோது, பதிலளித்தவர்களின் முடிவு மாறியது.

இந்த முறை, 49 விழுக்காட்டினர் அம்னோ தனியாகச் செல்ல வேண்டும் என்றும், 39 விழுக்காட்டினர் கூடாது என்றும் பதிலளித்துள்ளனர். இந்நிலைமை அம்னோ மற்றும் பெர்சத்து வேட்பாளர்களிடையேப் பல்முனை போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்பதனால்.

மறுபுறம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்கள் இரு கேள்விகளுக்கும் கூட்டணி அரசாங்கத்தின் பிளவுக்கு ஆதரவளித்தனர், அதே நேரத்தில் தேசியக் கூட்டணி ஆதரவாளர்கள் அதனை ஆட்சேபித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31 வரை ஒன்பது நாள்களுக்கு, தொலைபேசி மூலம், 21 வயதுக்கு மேற்பட்ட 1,202 பேரிடம் மெர்டேக்கா செண்டர் இந்த ஆய்வை மேற்கொண்டது.

222 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வுக்கு, மெர்டேகா செண்டர் நிதியளித்தது.

ஒட்டுமொத்தமாக, பதிலளித்தவர்களில் 44 விழுக்காட்டினர், அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்று ஒப்புக் கொள்ளவில்லை, அதேசமயம், 31 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர்.

மலாய் வாக்காளர்களில், மெர்டேகா மையம் 51 சதவிகிதத்தினர், அடுத்த தேர்தல்களில் அம்னோ தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கவில்லை என்று ஒப்புக் கொண்டனர்.

அம்னோ தற்போதைய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமா என்ற கேள்விக்கு, 61 விழுக்காடு மலாய்க்காரர்கள் உடன்படவில்லை, 21 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர்.