இன்று, 2,593 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவானதாகச் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
மேலும் இன்று, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு, சுவாசக் கருவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு மற்றும் புதியத் திரளைகளின் எண்ணிக்கையில் உயர்வு எனப் பிறப் பதிவுகளில் அதிக எண்ணிக்கையைக் காணமுடிந்தது.
சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து ஜொகூர் மற்றும் சபா. இந்த மூன்று மாநிலங்களும், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான் மற்றும் கெடா ஆகியவை 40-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
அதேவேளையில், 1,129 நோயாளிகள் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 67 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று, சபா, கோத்த கினபாலு மற்றும் கூடாட்டில் தலா ஒருவர், சிலாங்கூர், செலாயாங் மற்றும் சுங்கை பூலோவில் தலா ஒருவர் என நால்வர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 513 பேர் இந்நோய்க்குப் பலியாகி
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 965, ஜொகூரில் 571, சபாவில் 405, கோலாலம்பூரில் 265, நெகிரி செம்பிலானில் 125, பினாங்கில் 77, கிளந்தானில் 43, கெடாவில் 42, பேராக்கில் 34, திரெங்கானுவில் 19, மலாக்காவில் 13, பஹாங்கில் 11, லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் 9, சரவாக்கில் 5.
மேலும் இன்று, 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
ஜொகூரில் 4 – பெர்சியாரான் தெக்நோலோஜி திரளை, ஜாலான் பாடு திரளை, பெர்செப்பாடு திரளை, ஃபிர்மா திரளை; சிலாங்கூரில் 3 – டத்தாரான் உதாஸ் திரளை, காசா பெர்மாய் திரளை, மேடான் ஜாசா திரளை; கோலாலம்பூரில் 3 – ஜாலான் செபுத்தே திரளை, காயோ திரளை, ஈக்கான் எமாஸ் திரளை; சபாவில் 1 – கம்போங் பிதாஸ்; நெகிரி செம்பிலான் 1 – தாசேக் உத்தாமா திரளை; மலாக்காவில் 1 – அனாக் ஆயேர் திரளை.