கோவிட் -19 தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை விடுத்த சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சுகாதாரப் பராமரிப்பு அமைவில் மன அழுத்தத்தைக் குறைக்க, “இலக்கு” வைத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) முன்மொழிந்தார்.
சுகாதாரப் பராமரிப்பு அமைவு, அதிகரித்து வரும் நோயாளிகளுடன் போராடி வருவதாகவும், இப்போது அது ஒரு “முக்கியமானக் கட்டத்தில்” இருப்பதாகவும் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
“வழக்குகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன, எங்களால் நோயாளிகளுக்கு இடமளிக்க முடியாமல் போகலாம்.
“எங்கள் சுகாதாரப் பராமரிப்பு முறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தி நாங்கள் ஆராய்ந்துவருகிறோம். ஆனால் மிகச் சிறந்த தேர்வு என்னவென்றால், நமது சுகாதாரப் பராமரிப்பு முறையை மேம்படுத்துவது மட்டுமல்ல… சுமையை குறைப்பதும் அதில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.
நாட்டிற்கு இப்போது ஒரு “சர்க்யூட் பிரேக்கர்” (சுற்று உடைப்பு) தேவை என்றும், வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் ‘இலக்கு வைக்கப்பட்ட பி.கே.பி.’ ஆணையைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இது இலக்கு வைக்கப்பட்ட ஓர் அணுகுமுறை. கடந்த ஆண்டு மார்ச் 18 தொடங்கிய பி.கே.பி.-யை போல் நாடு முழுவதும் இது இருக்காது.
“இப்போது நமது திட்டத்தை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன் – உள்நாட்டில் அதிகமாக இருக்கும் பாதிப்பிடங்கள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட வேண்டும்.
“விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, விரைவில் நாங்கள் சில முடிவுகளை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.