ஜனவரி 31-ம் தேதி, கட்சி மாநாட்டில், பெர்சத்துவுடனான உறவுவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்று நஸ்ரி அஜீஸ் கூறினார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சரான அவர், பொதுத்தேர்தல் (ஜி.இ.) நடைபெற நிலைமை பாதுகாப்பாக அமையும் வரையில், ஒரு பராமரிப்பு அரசாங்கத்தை நியமிக்க மன்னரால் முடியும் என்றார்.
“அம்னோவின் தற்போதைய நடவடிக்கையின் நோக்கம், ஜி.இ. நடைபெற நாடாளுமன்றத்தைக் கலைக்க வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதாகும்.
“ஆனால், நாடாளுமன்றத்தை எப்போது கலைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மன்னர்தான்.
“அது மன்னரின் உரிமை. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சரியான நேரம் இது என்று மன்னர் உணரவில்லை என்றால், அவர் ஒரு பராமரிப்பு அரசாங்கத்தை நியமிக்க முடியும்,” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.
அம்னோ – பெர்சத்து உடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்மானத்தைக் கட்சி பிரிவுகள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் இது நடந்தது.
நேற்றிரவு, அம்னோ உச்சமன்றம், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு இத்தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்தது.
டிஏபி, அன்வருக்கு எதிராக…
மக்கள் ஆணையைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், உடனடியாக ஜி.இ.-ஐ நடத்த வேண்டும் என்று அம்னோ முன்பு கோரியிருந்தது.
அப்பிரேரணை முறையாக முடிவு செய்யப்படவில்லை என்றாலும், பெர்சத்துவுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இறுதியில் நடக்கும் என்று நினைப்பதாக நஸ்ரி தெரிவித்தார்.
பெர்சத்துவை நிராகரிப்பது, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் ஒத்துழைப்புடன் ஓர் அரசாங்கத்தை உருவாக்க அம்னோ விரும்புகிறது என்று அர்த்தமல்ல என்றும் நஸ்ரி வலியுறுத்தினார்.
“எங்களால் ஜி.இ.-ஐ நடத்த முடியும் என்றால், அம்னோ ஏன் பி.கே.ஆருடன் ஓர் அரசாங்கத்தை உருவாக்க விரும்ப வேண்டும்?” என்று அவர் சொன்னார்.
இப்போதைக்கு, அம்னோ அதன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது… டிஏபி மற்றும் அன்வரை அது நிராகரிக்கிறது என்று நஸ்ரி கூறினார்.