பெர்சத்து – அம்னோ உறவு முறிந்துவிடும் : பாஸ் காத்திருந்து பாருங்கள்

பெர்சத்துவுடனான உறவுவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து, காத்திருந்து, பார்க்கப்போவதாகப் பாஸ் முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் இன்னும் இறுதி முடிவாகவில்லை, ஜனவரி 31-ஆம் தேதி அம்னோ மாநாட்டுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று பாஸ் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மான் மலேசியாகினியிடம் சுருக்கமாக கூறினார்.

பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவில், ​​பாஸ் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டபோது துவான் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

இருப்பினும், இந்த நேரத்தில் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.

191 கட்சி பிரிவுகளில், 189 பேர் சமர்ப்பித்த பிரேரணையைப் பரிசீலித்த பின்னர் அம்னோ உச்சமன்றம் இந்த முடிவை எடுத்ததாக, அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.

இருப்பினும், தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை 99 பிரிவுகள் மட்டுமே நிராகரித்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.