நாடாளுமன்றம் கூடும்போது, எம்.பி.க்களை அவரவர் பெயர் சொல்லி அழைக்கவோ அல்லது குறிப்பிடவோ மக்களவை அனுமதிக்கவில்லை என்று ஈப்போ பாராட் எம்.பி. எம் குலசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாறாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத் தொகுதியின் பெயரால் மட்டுமே அவர்களைக் குறிப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
“கூட்டவிதி 36 (5) நாடாளுமன்ற உறுப்பினரைப் பெயரால் அழைக்கக்கூடாது என்று கூறுகிறது.
“அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியை வைத்து மட்டுமே அவர்களைக் குறிப்பிட முடியும்,” என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் அவர் கூறினார்.
ஷா ஆலம் எம்.பி. காலித் அப்துல் சமத் மீது, பாசிர் சாலாக் எம்.பி. தாஜுதீன் அப்துல் இரஹ்மான் தொடர்ந்துள்ள வழக்கின்போது, ஐந்து தவணைகள் எம்.பி. பொறுப்பு வகித்த குலசேகரன் அவ்வாறு கூறினார்.
‘கோக்‘ கொண்ட ஒரே பெண் எம்.பி. என, செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கை, தாஜுதீன் அழைத்தது பாலியல் தன்மை கொண்டது மட்டுமல்ல, மாறாக கூட்ட விதிகளின்படி தவறானது என்றும் அவர் கூறினார்.
கூட்டவிதி 36 (5) பின்வருமாறு : “ஓர் உறுப்பினர் மற்றொரு உறுப்பினரின் பெயரைக் குறிப்பிட அனுமதிக்கப்படுவதில்லை”.
2016, 21 மற்றும் 24 நவம்பரில், நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளில், காலித் தன்னை “துரதிர்ஷ்டவாதி” (சியால்) என்று அழைத்தார் என தாஜுடினின் கூற்றுக்கு எதிரான வழக்கின் முழு விசாரணைக்காக இன்றைய நீதிமன்ற விசாரணை நடந்தது.