கோவிட் -19 தொற்றுநோயால், கடந்த ஆண்டு முதல் ஒத்திவைக்கப்பட்ட மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வை அமல்படுத்துவது குறித்து புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கல்வி அமைச்சிடம் விளக்கம் கேட்டார்.
“எஸ்.பி.எம். 2020-க்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், மிக முக்கியமான தேசிய தேர்வுகள் எவ்வாறு திட்டமிடப்படும் என்பது குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
“இந்த மாத இறுதிக்குள் பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன, இருப்பினும், நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
“நாள்தோறும் அதிகரித்துவரும் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கையில், எஸ்.பி.எம். 2020 எவ்வாறு நடத்தப்படும்? ஒவ்வொரு மாணவரும் தயாராக இருப்பதையும், பரீட்சைக்குப் பாதுகாப்பாக அமர முடியும் என்பதையும் உறுதி செய்வதற்கான வழிமுறைகள் என்ன?” என்று ராஜீவ் இன்று ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400,000 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வுக்கு அமர்வார்கள் என்றும், இது தளவாடங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக அமையும் என்றும் ராஜீவ் கூறினார்.
கடந்தாண்டு, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின், ஆரம்பப் பள்ளி மதிப்பீட்டு சோதனை (யுபிஎஸ்ஆர்) மற்றும் படிவம் மூன்று மதிப்பீடு (பிடி 3) இரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதேநேரத்தில், எஸ்.பி.எம்., <em>சிஜில் வோகேஷனல் மலேசியா
(எஸ்.வி.எம்) மற்றும் <em>சிஜில் திங்கி அகமா மலேசியா
(ஸ்டாம்) ஆகியவை 2021 முதல் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆரம்பத்தில், எஸ்பிஎம் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் பிறகு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று கூறப்பட்டது.
“மாணவர்களும் தேர்வு கண்காணிப்பாளர்களும் தேர்வுக்கு முன், கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்களா?
“நோய்த்தொற்றைத் தடுக்க, தேர்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா?” என்றும் அவர் கேட்டார்.
கிருமிநாசினி திட்டம் குறித்தும் ராஜீவ் கேள்வி எழுப்பியதோடு, தேர்வு தொடங்கியவுடன் ஏதேனும் மாணவர்கள் அல்லது கண்காணிப்பாளர்களுக்கு தொற்றி ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேட்டார்.
தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்று ஏற்படும் வாய்புகள் அதிகம் உள்ளதையும் அவர் சுட்டிகாட்டினார்.
“நாடு தழுவிய அளவில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? அல்லது பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட கால அட்டவணையின்படி தேர்வுகளை எடுப்பார்களா? தேர்வுகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்ற நேரங்களில் நடைபெறுமா?
“கோவிட் -19 நோயாளிகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட மாணவர்களும் கண்காணிப்பாளர்களும் தேர்வுகளில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்களா அல்லது சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா? அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், அவரவர் வீடுகளில் தேர்வுக்கு அமர்வார்களா?
“ஒரு பகுதி பி.கே.பி.டி.யின் கீழ் இருந்தால், பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சோதனை நீட்டிக்கப்படுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்வு மண்டபத்திற்குள் நுழைந்து வெளியேறும் மாணவர்களைச் சமாளிக்கவும் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதையும் கல்வி அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“கல்வி அமைச்சு பதிலளிக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் இவை, இதன்வழி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலில் தேவையானதைச் செய்து, தயாராக இருக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்பிஎம் சோதனையை அளவிடும் கருவியாகப் பயன்படுத்தினால், கோவிட் -19 சிவப்பு மண்டலத்தில் உள்ள 15 விழுக்காடு பள்ளிகள் தேர்வுகளை நடத்த முடியாது என்று அவர் கூறினார்.
“இது நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை பற்றியக் கேள்விகளை எழுப்புகிறது,” என்று அவர் கூறினார்.
“கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக எஸ்பிஎம் தேர்வு இதுவரை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஸ்பிஎம் 2020-க்கு ஒரு பொறிமுறையையும் எஸ்.ஓ.பி.யையும் வழங்குமாறு நான் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கிறேன், மேலும் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான திட்டங்களும் பரிந்துரைகளும் என்ன?
“நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், எஸ்பிஎம் 2020-க்கான ஒரு விரிவான திட்டத்தை வகுப்பதற்கும் அமைச்சுக்கு நிறைய நேரம் உள்ளது, இனி அமைதியாக இருக்க முடியாது,” என்று ராஜீவ் கூறினார்.