நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து கடுமையான நிலையிலேயே உள்ளது. சுகாதார அமைச்சு இன்று, 2,643 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 16 மரணங்களையும் பதிவு செய்துள்ளது.
2,643 புதிய நேர்வுகளில், 1,666 மலேசியர்களைச் சார்ந்தது (63 விழுக்காடு), 975 மலேசியர் அல்லாதவை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு நேர்வுகளும் இதில் அடங்கும்.
இன்றையப் புள்ளிவிவரங்களின் படி, சிலாங்கூர் மற்ற மாநிலங்களை விட மிக அதிகமான (1,086) பாதிப்புகளைக் கொண்டுள்ளது, அல்லது இன்றைய மொத்த எண்ணிக்கையில் 41.1 விழுக்காட்டுடன் முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து சபா 401 (15.2 விழுக்காடு), ஜொகூர் 298 (11.3 விழுக்காடு).
இன்று, 16 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சிலாங்கூரில் 9 நோயாளிகள், சபாவில் நால்வர் மற்றும் ஜொகூரில் மூவர் என மொத்தம் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை இத்தொற்றின் காரணமாக நாட்டில் 537 பேர் மரணமடைந்துள்ளனர்.
நாட்டில் இன்றி அனைத்து மாநிலங்களிலும் புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 1,086, சபாவில் 401, ஜொகூரில் 298, கோலாலம்பூரில் 282, கெடாவில் 107, நெகிரி செம்பிலானில் 88, பேராக்கில் 80, பினாங்கில் 75, மலாக்காவில் 70, கிளந்தானில் 49, திரெங்கானுவில் 34, பஹாங்கில் 28, புத்ராஜெயாவில் 20, சரவாக்கில் 16, லாபுவானில் 6, பெர்லிஸில் 3.
மேலும் இன்று, 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
சிலாங்கூரில் 3 – ஹீவியா கட்டுமானத்தளத் திரளை (பெட்டாலிங் மாவட்டம் – 30), ஜாலான் கிளினிக் திரளை (கிள்ளான் – 132), புக்கிட் பெலிம்பிங் திரளை (பெட்டாலிங் மாவட்டம் – 33); கோலாலம்பூரில் 2 – கெப்பிட்டல் திரளை (லெம்பா பந்தாய் மாவட்டம் – 72), ஸ்தாபாக் திரளை (தித்திவங்சா மாவட்டம் – 16); சபாவில் 1 – கௌரான் திரளை (கென்னிங்காவ் மாவட்டம் – 55).