ரோன்95 மற்றும் ரோன்97 வகை பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே ஒரு லிட்டருக்கு RM1.84 மற்றும் RM2.14 ஆக இருப்பது, ஜனவரி 15 நள்ளிரவு வரை, ஒரு வார காலத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும்.
அதேவேளையில், டீசலின் சில்லறை விலை முன்பு ஒரு லிட்டருக்கு RM2.01 இருந்தது, ஒரு சென் அதிகரித்து RM2.02 ஆக ஏற்றங்கண்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய விலை, தானியங்கி விலை பொறிமுறையின் (ஏபிஎம்) பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையை அடிப்படையாகக் கொண்டது.
“உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அது கூறியது.
- பெர்னாமா