நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, குறிப்பாக பெர்சத்து-அம்னோ உடனான உறவு பற்றி விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியது,.
கோலாலம்பூரின் ஜாலான் இராஜா லாவுட்டில், கட்சியின் தலைமையகத்தில், இன்று காலை 10 மணிக்கு அக்கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்குப் பாஸ் தலைவர், அப்துல் ஹாடி அவாங் தலைமை தாங்கினார்.
இருப்பினும், பாஸ் மத்தியச் செயற்குழு உறுப்பினர் நிக் மொஹமட் அப்து நிக் அப்துல் அஜீஸ், காலை 10.30 மணிக்குக் கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.
நேற்று, பாஸ் பொருளாளர் இஸ்கந்தர் அப்துல் சமட், ஜிஇ 15-ல், பெர்சத்து உடனான உறவுகளைத் துண்டிக்க, அம்னோ எடுத்த முடிவு குறித்து கட்சி இன்று விவாதிக்கும் என்றார்.
பாஸ் மூத்தத் தலைவர், டாக்டர் மஹ்ஃபோஸ் முகமது, அம்னோ ஒரு கூட்டணியில் தொடர்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய, பாஸ் தொடர்ந்து முயற்சிக்கும் என்றார்.
நாட்டிலுள்ள மலாய்-முஸ்லிம்களின் மூன்று கட்சிகளும், அதிக இடங்களை இழப்பதைத் தவிர்க்க, பிடிக்கிறதோ இல்லையோ, ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் மஹ்ஃபோஸ் கூறினார்.