கோவிட் 19 : இன்று 2,451 புதிய நேர்வுகள், 5 மரணங்கள்

நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள், தொடர்ந்து ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது, இன்று பிற்பகல் வரை 2,451 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று போலவே, இன்றும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் 564 நேர்வுகள் (23.0 விழுக்காடு), சபாவில் 409 நேர்வுகள் (16.7 விழுக்காடு), நெகிரி செம்பிலானில் 351 வழக்குகள் (14.3 விழுக்காடு) பதிவாகியுள்ளன.

மற்ற மாநிலங்களில் புதிய நேர்வுகள் பின்வருமாறு: – ஜொகூர் (302), பினாங்கு (273), கோலாலம்பூர் (198), கெடா (65), கிளந்தான் (61), சரவாக் (55), மலாக்கா (50), பேராக் (42), பஹாங் (36), புத்ராஜெயா (17), திரெங்கானு (16), பெர்லிஸ் (8), லாபுவான் (4).

இன்று 1,401 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 82 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, ஐவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சுங்கை பூலோ மருத்துவமனை (2), குளுவாங் மருத்துவமனை (2) மற்றும் ஜொகூர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை (1) என ஐந்து மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை இத்தொற்றின் காரணமாக நாட்டில் 542 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ஜொகூரில் – மைக்ரோ திரளை (ஜொகூர் பாரு, கூலாய், பொந்தியான் & கோத்த திங்கி); பினாங்கு – சிம்போனி மெகஸின் திரளை (திமோர் லாவுட் & செப்ராங் பிறை); சரவாக் – பாசாய் திரளை (சிபு & முக்கா); மலாக்கா – தெக்னோலோஜி கெசிடாங் திரளை (மலாக்கா தெங்கா); திரெங்கானு – பாலுட் திரளை (டுங்குன்).