சிறை தண்டனையில் இருந்து சுகு தப்பினார்

ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம், மூன்று வருட நன்நடத்தை மற்றும் RM8,000 ஜாமீனுடன், முன்னாள் தோட்டத் தொழிலாளி எம் சுகுவை விடுதலை செய்தது.

2020 ஜூலை மாதம், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றத்தை, 30 வயதான சுகு ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி நோராஷிமா காலிட் இந்தத் தண்டனைக்கு உத்தரவிட்டார்.

இது தவிர, துணை வக்கீல் லியானா சவானி மொஹமட் ராட்ஸியின் முன்மொழிவுக்கு இணங்க, வழக்கு செலவான RM3,000 செலுத்துமாறும் நோராஷிமா சுகுவுக்கு உத்தரவிட்டார்.

இன்று, வழக்குரைஞர் சியாஹ்ருல் நிஜாம் மொஹமட் ரபி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 294-ன் கீழ், தனது வாடிக்கையாளர் மீது குறைந்தபட்ச பாதுகாப்போடு, பத்திரமாக நடந்துகொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

“இந்த வழக்கில், எனது வாடிக்கையாளர், நடந்ததற்கு தனது வருத்தத்தைப் பதிவு செய்ததோடு, மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். இது விசாரணையின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு ஜூலை 21-ம் தேதி, யூடியூப் உணவு ஆர்வலர் எஸ் பவித்ராவின் கணவரான சுகு, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை, ஈப்போ இராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ஆபத்தை விளைவிக்கும் கத்தி ஒன்றை வைத்திருந்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

  • பெர்னாமா