மலேசியாவைச் சிறந்த நாடாக மாற்ற, மக்கள் ஆணையைத் திருப்பிக் கொடுங்கள்

லிம் கிட் சியாங் | அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவை நிலையான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் தவறியதை அடுத்து, “மலாய் ஒற்றுமை” சொல்லாட்சி மலேசியாவுக்கு ஒரு தவறான வாக்குறுதி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நான் வெளியிட்டிருந்தால், இந்நேரம் நான் ‘மலாய் எதிர்ப்பு’ மற்றும் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ பேர்வழி என்ற குற்றம் சாட்டப்பட்டிருப்பேன். ஆனால், இதை வாரிசான் தலைவரும் முன்னாள் சபா முதல்வருமான ஷாஃபி அப்தால், கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூரில் ஐசியாஸ்-யூசோஃப் இஷாக் நிறுவனத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

‘மலாய் ஒற்றுமை’ சொல்லாட்சி தவறான வாக்குறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டிலும் அதற்கு அப்பாலும் மலேசிய அரசியலுக்கு மீட்டமைப்பு தேவை என்று ஷாஃபி கூறியிருந்தார்.

“அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்கத் தவறிவிட்டன,” என்று அவர் கூறினார்.

“மலாய்க்காரர்களில் 70 விழுக்காட்டினரும், மலேசியர்களில் 80 விழுக்காட்டினரும் நகர்ப்புறவாசிகள். ஆனால், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சியினர், மலாய்க்காரர்களில் பெரும்பாலோர் கிராமப்புறவாசிகள் என்ற அடிப்படையில் இன்னும் செயல்படுகின்றன. வாக்களிக்க கம்பங்களுக்குத் திரும்பும் நகர்ப்புற மலாய்க்காரர்களின் கிளர்ச்சியை அவர்கள் விரைவில் கண்டுபிடிப்பார்கள்.”

செம்போர்னா எம்.பி.யுமான அவர், நாட்டின் முக்கியத் தூண்களான – அரசியல், பொருளாதாரம், சமூகம் – ஆட்சி முதல் பொறுப்புக்கூறல் வரை, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சமூக இயக்கம் என அனைத்திலும் ஒரு புதிய மலேசியா தேவை என்று கூறினார்.

“இன மற்றும் மத அரசியலுக்கு இனி இடமில்லை – ஒற்றுமை சீர்திருத்தத்திற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். மலேசியர்கள் அவர்களின் சொந்த அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும், 2020-க்குப் பிந்தைய சகாப்தத்தை எதிர்கொள்ள, ஒரு மலேசியத் தேசத்தை உருவாக்க, பழைய கருத்துக்களிலிருந்து வெளியாவது கடினமானது என்றாலும், தகுதியானப் போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.”

மலேசியாவில், டிஏபி கம்யூனிஸ்ட், மலாய் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் எதிர்ப்பு என்ற தீங்கு விளைவிக்கும் பொய்கள் பல தசாப்தங்களாக அரசியலில் விஷம் கொண்டிருந்தது. மேலும், மத்திய அரசாங்கத்தில் 22 மாதங்களாக பக்காத்தான் ஹராப்பான் இருந்தபோது, இந்தத்

அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவை, இப்போது “மூன்று இராச்சியம்” சதித்திட்டங்களில் பூட்டப்பட்டுள்ளன, மற்ற இரு கட்சிகளும் நீர்த்துப் போவதற்கு முன்னர், அம்னோ தலைவர்கள் விரைவில் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

2008 பொதுத் தேர்தலில் அம்னோ வென்ற அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார். அப்படியானால், பெர்சத்துவின் மூன்று அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் போட்டியிட இடங்கள் இருக்காது.

ஆனால், இது 15-வது பொதுத் தேர்தலுக்கான அம்னோ கோரிக்கைகளின் அடிமட்டமானதாக இருக்காது, ஏனெனில் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான நாடாளுமன்ற இடங்களில், மீண்டும் அம்னோ போட்டியிட வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கும் – பாஸ் வென்ற இடங்களைத் தவிர. இது பெர்சத்து நசுக்கப்படுவதற்கும் காணாமல் போவதற்கும் வழிவகுக்கும்.

11 மாதகால தேசியக் கூட்டணி அரசாங்கம், மலேசியாவை மீண்டும் தோல்விகண்ட அந்தப் பழைய பாதைக்கே திரும்புவதைக் காட்டுகிறது.

ஷெரட்டன் நடவடிக்கை சதித்திட்டத்தில், துல்லியமாக இருந்த இந்தச் சுயநல மற்றும் குறுகிய கால அரசியல் நாட்டம்தான், மலேசியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளை ஏற்படுத்தியது, பிந்தையது ஒரு பயங்கரமான உச்சத்திற்கு உயர்ந்தது.

பக்காத்தான் ஹராப்பானுக்கான ஆணையை மீட்டெடுத்து, நாட்டின் ஒன்பதாவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பதன் வழி, மலேசியா ஓர் ஐக்கிய, இணக்கமான, பல்லின, உலகத் தரம் வாய்ந்த, மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதை என அனைத்தும் உள்ள சிறந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கலாம்.