அவசர காலத்தில், நாடாளுமன்றம் கூட்டப்படாது, பொதுத் தேர்தல் எதுவும் நடத்தப்படாது என்று பிரதமர் கூறினார்.
இருப்பினும், நீதித்துறை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.
முஹைதீன் யாசின் இந்த விஷயத்தைச் சற்றுமுன்னர் ஒரு நேரடி சிறப்பு செய்தியில் அறிவித்தார்.
மேலும், கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைச் சீர்குலைக்க முயல்பவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.
“கோவிட் -19 தொற்றையும் நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்வகிப்பதற்காக, அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக நான் கடுமையான எச்சரிக்கையை அளிக்கிறேன்.
“மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.