ஹம்சா – கோவிட் -19 தொற்றுக்கு ஆளான மூன்றாவது அமைச்சர்

கோவிட் -19 | இந்த மாதத்தில், கோவிட் -19 நோய் கண்ட மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் ஆவார்.

நேற்று, அமைச்சர் எடுத்த பரிசோதனை முடிவுகள் நேர்மறையானதாக வந்துள்ளதை ஹம்ஸாவின் அலுவலகம், ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தது.

ஜனவரி 8 முதல் 11 வரையிலான அவரது நெருங்கியத் தொடர்புகள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துமாறு அது வலியுறுத்தியது.

“சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காலம் முழுவதும், அமைச்சு சீராக செயல்படுவதை ஹம்சா தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்வார்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு அமைச்சர்கள் அத்தொற்றினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, முழு அமைச்சரவையும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அம்மூன்று அமைச்சர்களைத் தவிர, மற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் இந்த நோய்க்கு எதிர்மறையான முடிவுகளையேப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா கூறியதாக, பெர்னாமா மேற்கோள் காட்டியுள்ளது.

நாட்டில் இன்றுவரை, மொத்தம் நான்கு அமைச்சர்கள் அக்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபரில், பிரதமர் துறை அமைச்சர் சுல்கிஃப்லி மொஹமட் அல்-பக்ரியும் கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமான முடிவைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.