தனது முன்னாள் கணவரைக் கைது செய்து, தங்கள் மகள் பிரசானா தீட்சாவைத் திருப்பித் தரத் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், எம்.இந்திரா காந்தி தொடுத்துள்ள வழக்கை இரத்து செய்யுமாறு, காவல்துறை தலைவரும் (ஐ.ஜி.பி) மற்ற மூன்று பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், ஐ.ஜி.பி., அரச மலேசியக் காவல்துறை, உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கம் விண்ணப்பித்திருந்த அந்தக் கோரிக்கை கடிதம், மழலையர் பள்ளி ஆசிரியருமான இந்திராவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டுமென, நான்கு பிரதிவாதிகளும் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளதை இந்திராவின் வழக்கறிஞர் இராஜேஷ் நாகராஜன் உறுதிப்படுத்தினார்.
“ஈப்போ உயர்நீதிமன்றத்தில், வழக்கின் கண்காணிப்பு இருப்பதால், பிரதிவாதிகள் சிவில் வழக்கை (இந்திராவால்) இரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்,” என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இராஜேஷ் கூறினார்.
முஹம்மது ரிட்டுவான் அப்துல்லாவைக் கண்டுபிடித்து, அவரைக் கைதுசெய்து, பிரசானாவை அவரிடம் திருப்பித் தரத் தவறியதாகக் கூறி அந்நான்கு தரப்பினர் மீது இந்திரா வழக்கு தொடர்ந்தார்.
பிப்ரவரி 19-ம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அடுத்த வழக்கு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.