கோவிட் 19 : இன்று 4,029 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்

நாட்டில் இன்று, 4,029 புதியக் கோவிட் -19 நேர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது, இது இதுவரையிலான ஆக அதிக தினசரி பதிவாகும்.

முந்தைய ஆக அதிகப் பதிவு, இரண்டு நாட்களுக்கு முன்பு, 3,337 ஆகும்.

சிலாங்கூரில் 1,400-க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜொகூர் மற்றும் சபா.

புதிய நேர்வுகளில், 110 (2.7 விழுக்காடு) தடுப்புக்காவல் மையங்கள், சிறை அல்லது குடிநுழைவு மையங்களில் ஏற்பட்ட புதியத் திரளைகளில் இருந்து வந்தவை.

இதற்கிடையே, இன்று 2,148 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 79 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,466), ஜொகூர் (719), சபா (449), கோலாலம்பூர் (347), நெகிரி செம்பிலான் (214), கெடா (195), கிளந்தான் (141), பினாங்கு (120), திரெங்கானு (80), சரவாக் (69), பஹாங் (65), பேராக் (54), மலாக்கா (44), புத்ராஜெயா (35), லாபுவான் (17), பெர்லிஸ் (14).

இன்று, சபா, லாஹாட் டத்து மருத்துவமனையில் மூவர், கோத்த கினபாலு, குயின் எலிசபெத் மருத்துவமனையில் ஒருவர், சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இருவர், பேராக், ஈப்போ இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் ஒருவர், பஹாங், பெந்தோங் மருத்துவமனையில் ஒருவர் என எண்மர் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 594 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (3) – சீனாய் சைபர் பணியிடத் திரளை (கூலாய்), ஜாலான் செம்புரோங் பணியிடத் திரளை (குளுவாங்), தெம்போக் நானாஸ் தடுப்புக்காவல் மையத் திரளை (பொந்தியான்); பேராக் (1) – தாமான் ஜூத்தா திரளை (ஹீலிர் பேராக்); நெகிரி செம்பிலான் (1) ஜாலான் பெர்மாத்தா பணியிடத் திரளை (சிரம்பான்); பஹாங் (1) – கம்போங் லெபு திரளை (பெந்தோங் & குவாந்தான்).