அன்னுவார் : சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், அம்னோ எம்.பி.க்களின் ஒப்புதலை நாடுகிறது

அவசரகாலப் பிரகடனம் தொடர்பாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க வேண்டுமென, அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் கட்சியின் எம்.பி.க்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக கெத்தெரெ எம்.பி. அன்வார் மூசா கூறினார்.

இந்த விஷயத்தை வெளிப்படுத்திய முன்னாள் பி.என். பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, அம்னோ எம்.பி.க்களிடம் ஒப்புதல் தெரிவிக்குமாறு கேட்டதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நிபுணர்களை அஹ்மத் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

“அம்னோ தலைமைச் செயலாளர், மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (3) இன் கீழ் ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட பேரரசருக்கு வலியுறுத்துவதற்கான அந்த உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்க 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே எம்.பி.க்களுக்கு வழங்கியுள்ளார்.

“சட்ட விவகாரங்களில் புத்திசாலித்தனமாக இருப்பதற்கு, அரசியலமைப்பு வல்லுனர்களை (அரசியலமைப்பு நிபுணர்) கலந்தாலோசிப்பது அவருக்கு நல்லது,” என்று அன்னுவார் தனது கீச்சகத்தில் இன்று காலை தெரிவித்தார்.

அன்னுவார் தனது மறுமொழி கடிதத்தையும் அம்னோ பொதுச்செயலாளருக்குப் பதிவேற்றினார்.

அகமதுவின் கருத்துக்காக மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசியலமைப்பின் 150-வது பிரிவின் கீழ், அவசரக்காலம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெறாது. அவசர காலம் (2021 ஆகஸ்ட் 1) முடிந்த பின்னரே மக்களவையைக் கூட்ட முடியும்,” என்று கூறிய அன்னுவார், அக்கடிதத்தைத் திரும்பப் பெறுமாறு அஹ்மத்தை வலியுறுத்தியுள்ளார்.