கோவிட் 19 : இன்று 4,008 புதிய நேர்வுகள், 11 மரணங்கள், அவசரப் பிரிவில் 246 நோயாளிகள்

நாட்டில் இன்று, 4,008 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கு (48 விழுக்காடு), ஜொகூர் (11.7 விழுக்காடு), சபா (10.1 விழுக்காடு) எனப் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2,374 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 246 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 96 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,391), கோலாலம்பூர் (513), ஜொகூர் (470), சபா (406), சரவாக் (203), நெகிரி செம்பிலான் (176), பேராக் (170), கெடா (142), மலாக்கா (132), பினாங்கு (124), கிளந்தான் (121), திரெங்கானு (81), பஹாங் (52), புத்ராஜெயா (23), லாபுவான் (1).

இன்று, 11 பேர் இந்நோயினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இதுவரையில் நாட்டில் மொத்தம் 639 பேர் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

மேலும் இன்று 16 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (4) – ஜாலான் செரோஜா பணியிடத் திரளை (கூலாய்), தம்போய் லீமா பணியிடத் திரளை (ஜொகூர் பாரு), ஜாலான் நியாகா (கோத்த திங்கி & குளுவாங்), ஜாலான் டிஜிட்டல் கட்டுமானத்தளத் திரளை (கூலாய் & திரெங்கானு – உலு திரெங்கானு) ; மலாக்கா (2) – புக்கிட் செபுகோர் கட்டுமானத்தளத் திரளை (மலாக்கா தெங்கா), ஜாலான் உசஹா பணியிடத் திரளை (மலாக்கா தெங்கா, அலோர் காஜா & ஜாசின்); பேராக் (2) – பத்து அனாம் திரளை (பாத்தாங் பாடாங்), பெர்சியாரான் தாசேக் பணியிடத் திரளை (கிந்தா & கோல கங்சார்); சிலாங்கூர் (2) – ஜாலான் அப்துல் அஸிஸ் கட்டுமானத்தளத் திரளை (பெட்டாலிங்), பெஸ்தாரி ரந்தாவ் பணியிடத் திரளை (கிள்ளான்); பஹாங் (2) – புக்கிட் குளுகோர் திரளை (குவாந்தான்), சோவ்மில் லுயிட் திரளை (மாரான் & குவாந்தான்); சபா (2) – கம்போங் பாலிபாத்தா திரளை (பியூஃபோர்ட் & சண்டகான்), ஜாலான் கே.கே.ஐ.பி. செலாத்தான் பணியிடத் திரளை (கோத்த கினபாலு); கோலாலம்பூர் (1) – ஜாலான் செஜாத்திரா பணியிடத் திரளை (தித்திவங்சா); நெகிரி செம்பிலான் (1) – சுங்கை ஈபோர் பணியிடத் திரளை (ரெம்பாவ்).