இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) சில நெகிழ்வுத்தன்மைகளோடு அமலில் உள்ளது, குறிப்பாக பொருளாதாரத் துறைக்கு நடைமுறைப்படுத்துவது, கடினமான ஒன்றுதான், என்றாலும் மக்களின் சுகாதார அம்சங்களையும் பொருளாதாரத்தையும் சமன் செய்ய இது அவசியமாகிறது.
மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பொறுத்தவரை, பி.கே.பி. 2.0, பெரும் நிறுவனங்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் பொருளாதார நலன்களிலும், அதே நேரத்தில் மக்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது என்றார்.
“கோவி-19 காரணமாக மக்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை, அதேசமயம் பட்டினியாலும் அவர்கள் இறப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என்று சமீபத்தில் பெர்னாமாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.
பி.கே.பி. 2.0 அமலாக்கம் தளர்வாக உள்ளது என சில தரப்பினர் தகராறு செய்கின்றனர், ஆனால் ஒரு பரந்த சூழலில் இருந்து அதனைப் பார்க்க வேண்டும், பல ஆண்டுகளாக பி.கே.பி செயல்படுத்தப்பட்டால் நாடு திவாலாகிவிடும்.
“பி.கே.பி காலத்தில், நாடு ஒவ்வொரு நாளும் RM2.4 பில்லியனை இழந்தது. அரசாங்கம் தங்கள் அன்றாட வருமானத்தை நம்பியுள்ள மக்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான், பி.கே.பி 2.0-இன் போது, பொருளாதாரத் துறையின் பெரும்பகுதி செயல்பட அனுமதிக்கிறோம். மக்களின் நலனும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்றார்.
மக்களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டாலும், நீண்டகால விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தால் எப்போதும் உதவிகளை வழங்க முடியாது என்று இஸ்மாயில் சப்ரி விளக்கினார்.
ஜனவரி 25, 2020 அன்று, சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் வழியாக, மலேசியாவிற்குள் நுழைந்த மூன்று சீனர்கள் சம்பந்தப்பட்ட முதல் வழக்கு பதிவானது; ஆக, தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. முதல் அலையின் போது, அது பெரும்பான்மை இறக்குமதி பாதிப்புகள் மற்றும் மலேசியர்கள் அல்லாதவர்கள். ஆனால், இரண்டாவது அலையில் தொற்று உள்ளூர் பரவலை அதிகம் உள்ளடக்கியது, கோவிட்-19 முதல் தொற்று 2020, பிப்ரவரி 4-ம் தேது அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது அலையைத் தொடர்ந்து, அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் 18 முதல் கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) பி.கே.பி.யை செயல்படுத்தி வருகிறது, மேலும் பல மாதங்களுக்குப் பிறகு தொற்று சரிவைக் காட்டியபோது, நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எஸ்ஓபிகளைச் சற்று தளர்த்தத் தொடங்கியது.
பி.கே.பி-க்குப் பிறகு, கோவிட்-19 தாக்கத்தைக் குறைப்பதில் மலேசியா வெற்றிபெறுமா என்று கேட்டதற்கு, பாதுகாப்பு அமைச்சரான இஸ்மாயில் சப்ரி, பாதிப்புகளின் எண்ணிக்கை குறையும், ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று கூறினார்.
“கோவிட்-19 தொடர்ச்சியை உடைப்பதற்கான சிறந்த வழி, நேரடி நடமாட்டம் இல்லாமல் செய்வதே உள்ளது, ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமல்ல. முக்கியத் துறைகள் பல பொருளாதார நலன்களின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இந்தப் பி.கே.பி. ஒரு முழுமையான ‘அடைப்பு’ அல்ல, ஆனால், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நம்புகிறார் குறையும் என்று, ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும்,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
- பெர்னாமா