டி.வி.பி. கூடுதலான ஒரு செயல்முறை, பி.டி.பி.ஆர்.-ஐ ஈடுசெய்யாது – மஹாடி ஜே முராத்

தொலைக்காட்சி வழி கல்வியை (டிவிபி) ஒரு கூடுதல் முறையாக மட்டுமே பயன்படுத்த முடியும், அதனால் முழு இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபிஆர்) செயல்முறையை ஈடுசெய்ய முடியாது என மலேசியக் கலை மற்றும் ஊடக ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மஹாடி ஜே. முராத் விளக்கினார்.

1972-ஆம் ஆண்டில், டி.வி.பி.-யின் புகைப்படப் பிரிவின் முன்னாள் இயக்குநரான மஹாடி, பள்ளிகளில் அல்லது இயங்கலையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் தொலைக்காட்சியின் மூலம் கற்றல் ஒரு நிரப்பியாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறினார்.

“இந்தக் கோவிட் -19 தொற்றுநோயின் சூழலில், கற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய நிலையில், டிவிபி-யும் ஒன்று என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இருப்பினும், டி.வி.பி.-ஐ, ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்த முடியாது, வகுப்பறையில் இருப்பதைப் போலவும் கட்டமைக்க முடியாது, ஏனெனில் அதன் திறன் கட்டுப்படுத்தப்பட்டது.

இணைய வலையமைப்பின் தடைகள் மற்றும் இயங்கலையில் – பி.டி.பி.ஆர். மூலம் கற்றல் எளிமை குறித்து, சில பள்ளி மாணவர்கள் அனுபவித்த சிரமங்கள் காரணமாக டி.வி.பி.-யைப் பயன்படுத்தலாம் என்ற அழைப்பு சில எம்.பி.க்களால் முன் வைக்கப்பட்டது.

சமீபத்தில், டி.வி.பி.-க்கு அதிகாரம் அளிக்க தனது தரப்பு எப்போதும் முயற்சிக்கிறது, இப்போது பல தொலைக்காட்சி நிலையங்களில் ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் பொருத்தமான அணுகுமுறையுடன் ஒளிபரப்பு தொடங்கியுள்லது என்று கல்வியமைச்சர் ராட்ஸி ஜிடின் விளக்கினார்.

இதற்கிடையில், டி.வி.பி. வழி தேர்வுகளுக்குப் பதிலளிக்கும் வடிவம் அல்லது அடிப்படை பாடங்களைக் கற்றுக்கொள்வது போன்ற கூடுதல் முறைகளை மாணவர்களுடன் பகிரலாம் என்று மஹாடி விளக்கினார்.

1972-ம் ஆண்டில், வழக்கமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தொடங்கிய டி.வி.பி, மார்ச் 1, 2008-ல் எடுவெப்டிவி (EduwebTV) வழியாக இயங்கலைக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 1, 2009 முதல் வழக்கமான தொலைக்காட்சி அலைகளில் அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இருப்பினும், கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல், பி.கே.பி. அமல்படுத்தியதைத் தொடர்ந்து, 2020 ஏப்ரல் 6 அன்று மீண்டும் இது நிறுவப்பட்டது.