கோவிட் -19 : கெடா எம்.பி. அலுவலகம் தற்காலிகமாக மூடப்படும்

அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமானில் அமைந்துள்ள மாநில அரசு இலாகா ஒன்றில், கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, கெடா மந்திரி பெசார் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்படும்.

கெடா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களின்படி, மந்திரி பெசார் அலுவலகம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூடப்படும்.

அதே இடத்தில் அமைந்துள்ள கெடா மாநில ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத் துறை (ஜித்து) அலுவலகம், அனைத்து நிர்வாக ஊழியர்களின் துப்புரவு மற்றும் சுயத் தனிமைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில், இன்று முதல் பிப்ரவரி 6 வரை மூடப்பட்டுள்ளது.

ஊழியர்களில் ஒருவருக்குக் கோவிட் -19 தொற்றின் சோதனை முடிவு நேர்மறையாகக் காணப்பட்டதால் இது செய்யப்பட்டது.

இது தவிர, அதே முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மற்றொரு இடுகையில், கெடா மாநில நீர்வள வாரியமும், அதன் செயல்பாட்டை இன்று முதல் பிப்ரவரி 6 வரை மூடுவதாகத் தெரிவித்துள்ளது.

மேலதிகத் தகவலுக்குப், பொதுமக்கள் [email protected] அல்லது கெடா மாநில நீர்வள வாரியத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.

  • பெர்னாமா