இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறையில் இருந்து எந்த மாணவர்களும் பின்வாங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, ஆசிரியர்கள் அதிக ஆக்கப்பூர்வமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துணைக் கல்வியமைச்சர் II டாக்டர் மா ஹாங் சூன், இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்று கூறினார், ஏனெனில் மாணவர்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இயங்கலையில் கற்றலைப் பின்பற்ற இணைய அணுகலைப் பெறுவதில் சிரமப்பட்டனர்.
பி.டி.பி.ஆர். அமல்படுத்தப்பட்டதிலிருந்து எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை கல்வி அமைச்சு அறிந்திருக்கிறது என்றும், அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“கடந்த ஆண்டு பி.கே.பி. தொடங்கியதிலிருந்து, பி.டி.பீ.ஆரின் தரத்தை மேம்படுத்த அமைச்சு, பள்ளி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சமூகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, குறிப்பாக வசதிகள் பற்றாக்குறை உள்ள இடங்களில், எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.