இன்று 4,094 புதிய நேர்வுகள், 10 மரணங்கள்

கோவிட் – 19 | நாட்டில் இன்று, 4,094 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று 4,275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய எண்ணிக்கை மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், இன்று 10 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 9 பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டுக்காரர். ஆக, நாட்டில் இதுவரை 717 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

3,281 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 118 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,577), ஜொகூர் (717), கோலாலம்பூர் (678), சபா (282), சரவாக் (171), பினாங்கு (99), பேராக் (94), கெடா (92), திரெங்கானு (80), மலாக்கா (73), பஹாங் (72), லாபுவான் (55), நெகிரி செம்பிலான் (48), கிளந்தான் (37), புத்ராஜெயா (10), பெர்லிஸ் (9).

மேலும் இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஜொகூரில் 3, பஹாங்கில் 2, சிலாங்கூர், சரவாக், மலாக்கா & கெடா, லாபுவான் தலா 1 புதியத் திரளைகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 5 பணியிடத் திரளைகள் ஆகும்.