அவசரநிலை : கைருதீனின் சம்மன் இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது

மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அவசரநிலை தொடர்பான பிரதமரின் ஆலோசனையின் நியாயத்தன்மையைச் சவால் செய்யும் சம்மனின் நகல், இன்று முஹைதீன் யாசினுக்கும் அரசாங்கத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி, இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய சம்மன்களின் நகல் அது என்றார். இந்த வழக்கில் முஹைதினும் மலேசிய அரசாங்கமும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

“பிரமாணப் பத்திரத்தின் நகல் நேற்று நீதிமன்றத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் நகலை, இன்று இரு பிரதிவாதிகளிடமும் ஒப்படைப்போம்,” என்று அவர் கூறினார்.

அந்த வழக்கில், டாக்டர் மகாதிர் முகமதுவின் வலுவான ஆதரவாளர் என்று கூறப்படும் கைருதீன் அபுஹாசன் சார்பாக முஹம்மது ரபீக் செயல்படுகிறார்.

அவசரநிலையைப் பிரகடனம் செய்ய, அகோங்கிற்கு அரசாங்கம் பரிந்துரை அளித்துள்ளதை நீதிமன்றத்தில் சவால் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்கொப்ப இந்த வழக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் அன்வர் இப்ராஹிம், அகோங்கிற்கு முஹைதீனின் ஆலோசனையின் செல்லுபடியைச் சவால் செய்ய இதேபோன்ற ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

ரபீக்கின் கூற்றுப்படி, அவரின் வழக்கை நிர்வகிப்பதற்கான தேதியாக பிப்ரவரி 19 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மரியானா யஹ்யா முன் வழக்கு ஆஜர்படுத்தப்படும்.

அசல் வழக்கின் நகலின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்க​​ முஹைதீனின்  ஆலோசனை இது, எனவே அதன் செல்லுபடியை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமென கைருதீன் கோரியுள்ளார்.

அத்தகைய ஆலோசனை செல்லாது மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.