எம்.எம்.ஏ. : கோவிட் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த, தனியார் ஜி.பி.க்களின் பங்கேற்பை அதிகரிக்கவும்

மக்களுக்குக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பரவலாக விநியோகிக்க, தனியார் பொது பயிற்சியாளர்களின் (ஜி.பி.) பங்கேற்பை இணைக்குமாறு மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அதன் தலைவர், டாக்டர் எம் சுப்பிரமணியம் முனியாண்டி, இது தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உதவும் என்றார்.

“அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில், கோவிட் -19 பரிமாற்றங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதால், அரசாங்கம் அதன் திட்டங்களில், அவ்விடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல தனியார் ஜி.பி.  கிளினிக்குகள் இந்தப் பகுதிகளில் அமைந்துள்ளன; எனவே, அவர்களை அணுகுவது விரைவாகவும் மக்களுக்கு வசதியாகவும் இருக்கும் .

“மேலும், தனியார் ஜி.பி.க்களால் நிர்வகிக்கப்படும் பல நோயாளிகளுக்கு கொமொர்பிடிட்டிகள் உள்ளன, அவை ஏற்கனவே தடுப்பூசிகளைப் பெற தகுதியுடையவை, தேசிய தடுப்பூசி திட்டத்தில் தற்போதைய திட்டங்களின்படி பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேசியத் தடுப்பூசி திட்டத்தில், தனியார் ஜி.பி. கிளினிக் பங்கேற்பை அதிகரிப்பது அரசாங்கத் தடுப்பூசி தளங்களில் ஒட்டுமொத்த போக்குவரத்தைக் குறைக்க உதவும் என்றும் சுப்பிரமணியம் கூறினார்.

ஜி.பி.க்கள் தங்கள் சொந்த ஊழியர்களைப் பயன்படுத்துவதால், இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்க மனிதவளம் மற்றும் வளங்கள் மீதான சார்புநிலையை இது குறைக்கும், என்றார்.

“கோவிட் -19 திரையிடலில், குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு, ஆங்காங்கே அமைந்துள்ள கிளினிக்குகள் ஈடுபட்டுள்ளதால், ஜி.பி.க்களுக்கு அதில் அனுபவம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா