ஜனவரி 29 | நாட்டில் இன்று, 5,725 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது ஒட்டுமொத்த பாதிப்புகளை 203,933 ஆக உயர்த்தியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (3,829, அல்லது இன்றைய மொத்தத்தில் 66.9 விழுக்காடு) பதிவாகியுள்ளன, சிலாங்கூர் 3,126 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது – இது நேற்று பதிவானதை விட இரு மடங்காகும்.
ஜனவரி 12 தொடக்கம், முழு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஓ.) கீழ் வைக்கப்பட்டு, இன்றுடன் 17 நாட்கள் ஆகின்றன.
இதற்கிடையில், இன்று 16 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலாங்கூரில் ஒன்பது பேரும், கோலாலம்பூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
சபாவில் இரண்டு இறப்புகளும், சரவாக், மலாக்கா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் தலா ஓர் இறப்பும் பதிவாகியுள்ளன.
தற்போது, கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் -19 இறப்புகள் தேசிய மொத்தத்தில் (733) 25.5 விழுக்காடாக உள்ளது, 2020 நவம்பரின் பிற்பகுதியில் இருந்து இது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இறந்த 16 பேரில் ஐவர், மருத்துவமனை வந்து சேர்ந்தபோது, இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இன்று 3,423 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 301 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 115 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (3,126), கோலாலம்பூர் (687), ஜொகூர் (684), சபா (288), சரவாக் (179), திரெங்கானு (137), கெடா (125), பினாங்கு (99), கிளந்தான் (93), மலாக்கா (74), பேராக் (73), நெகிரி செம்பிலான் (69), பஹாங் (67), புத்ராஜெயா (16), லாபுவான் (5), பெர்லிஸ் (3).
மேலும் இன்று 12 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 10 பணியிடத் திரளைகள் ஆகும்.