நாட்டில் இன்று, 5,728 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று, சிலாங்கூர் (3,285), ஜொகூர் (792), கோலாலம்பூர் (480) ஆகிய மாநிலங்களில் புதியத் தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
சிலாங்கூர் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, பெட்டாலிங் மாவட்டத்தில் 1,654 பாதிப்புகள் உள்ளன – இதில் டாமான்சராவில் 773 பாதிப்புகளும் பெட்டாலிங் மாவட்டத்தில் 506 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும் இன்று, 13 இறப்புகள் நேர்ந்துள்ள வேளையில், 3,805 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 120 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பெர்லிசில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (3,285), ஜொகூர் (792),கோலாலம்பூர் (480), சபா (263), சரவாக் (191), நெகிரி செம்பிலான் (158), பேராக் (112), பினாங்கு (101), கெடா (99), திரெங்கானு (85), பஹாங் (51), மலாக்கா (42), லாபுவான் (29), கிளந்தான் (28), புத்ராஜெயா (12).
மேலும் இன்று 16 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 13 பணியிடம் சார்ந்தவை.