‘பைத்துஸ் சோலேஹா’ பாதுகாப்பிடத்தைச் சார்ந்த 22 குழந்தைகள் உட்பட, 61 குடியிருப்பாளர்கள் கோவிட் -19 தனிமைப்படுத்தலுக்காக ஜொகூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜனவரி 30 அன்று, அங்குத் தங்கியிருந்த 40 பேரில், 38 பேருக்கு கோவிட் -19 சோதனை நேர்மறையாக வந்ததைத் தொடர்ந்து, ஏழு பேர் குளுவாங் மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் ஜொகூர் பாரு பெர்மாய் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக மாக் லிசா என அழைக்கப்படும் அத்தங்குமிடத்தின் நிறுவனர் கூறினார்.
தங்குமிடம் தேவைப்படும் இளம் பெண்களுக்கு இடமளிக்கும் லிசா, பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அவர்களின் தாய்மார்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
இதற்கிடையில், தங்குமிடத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கோவிட் -19 எஸ்ஓபி-க்களை எப்போதும் கடைப்பிடிப்பதாக மாக் லிசா கூறினார், ஆனால் பரவலைக் கட்டுப்படுத்த இது மட்டும் போதாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.
கடந்த இரண்டு நாட்களில் ஜொகூர், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இதுபோன்ற மூன்று பாதிகாப்பிடங்களில் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.