‘மலாய் மதம்’ : போலிஸ் விசாரணையைத் தொடங்கியது, அமைச்சர் ஏ.ஜி.யைச் சந்திப்பார்

“மலாய் மதம்” போதனைகளுக்கு எதிராக போலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்ததாக தி ஸ்டார்  நாளிதழ் இன்று மேற்கோளிட்டுள்ளது.

“புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே.) இயக்குநர் ஹுசிர் முகமது இந்த விஷயத்தை ஆராய்வதாக எனக்குத் தெரிவித்தார்.

“சட்ட மீறல் ஏதேனும் இருந்தால் நாங்கள் சட்டத்துறை தலைவருடன் கலந்துரையாடுவோம். இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.

நேற்று, பிரதமர் துறை(மத விவகாரங்கள்) துணை அமைச்சர் அஹ்மத் மர்சுக் ஷாரி, சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (ஜாய்ஸ்) அதன் கற்பித்தல் குறித்து கிட்டத்தட்ட விசாரணைகள் முடிந்துவிட்டன என்றும், இது இபு யத்தி (Ibu Yati) என்ற ஒரு பெண்ணால் கொண்டுவரப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோவை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நபரையும், விரைவாகத் தண்டிக்க வேண்டாம் என்றும் அஹ்மத் மர்சுக் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.