கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 4,284 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 18-ஆகப் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 809 ஆக உள்ளது.
சபாவில் மொத்தம் 190 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது டிசம்பர் பிற்பகுதியில் இருந்து மாநிலத்தில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். சபாவில் புதிய பாதிப்புகள் ஜனவரி 23 முதல் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
3,804 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 141 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,572), ஜொகூர் (964), கோலாலம்பூர் (651), சபா (190), சரவாக் (148), நெகிரி செம்பிலான் (133), கெடா (124), பினாங்கு (122), பேராக் (106), கிளாந்தான் (65), பஹாங் (66), திரெங்கானு (55), மலாக்கா (53), லாபுவான் (21), புத்ராஜெயா (14).
மேலும் இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 12 பணியிடம் சார்ந்தவை, ஒன்று தடுப்பு முகாம் சார்ந்த திரளையாகும்.