அவதூறு குற்றச்சாட்டுகள் : தோமி தாமஸைக் காவல்துறை அழைக்கும்

முன்னாள் தேசியச் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸின் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் சட்ட ஆலோசார் III, மொஹமட் ஹனாபியா ஜகாரியாவின் புகார் அறிக்கை ஒன்று, நேற்று கிடைக்கப்பெற்றதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட, “மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்” (“My Story: Justice in the Wilderness”) என்றத் தலைப்பில், தோமியின் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக இந்தப் புகார் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபட்ஸில் அஹ்மத் தெரிவித்தார்.

“ஆம், அவரது (தோமி தாமஸ்) உரையாடலைப் பதிவு செய்ய விரைவில் நாங்கள் அவரை அழைப்போம், மேலும் அவதூறு வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500- இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

புத்தகத்தின் 248-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி பொய்யானது என்றும், அது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி தொடர்பான வழக்குகளில், விசாரணைக் குழுவை வழிநடத்தவும் மேற்பார்வையிடவும் அவரால் இயலாது என்று பொருள்படும் வகையில் தோமி குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மொஹமட் ஹனாபியா கூறினார்.

  • பெர்னாமா