இன்று 4,571 புதிய நேர்வுகள், 17 மரணங்கள், அவசரப் பிரிவில் 308 நோயாளிகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,571 புதியக் கோவிட் -19 நேர்வளும் 17 மரணங்களும் பதிவாகியுள்ளன.

ஜொகூர், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியவை, ஜனவரி 13-ம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு தொற்றினால் கடுமையாகப் பாதிகப்பட்டிருந்த சபாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை ஜனவரி 23 முதல்  குறைந்து வருகிறது.

6 பணியிடத் திரளைகள் மற்றும் 4 சமூகமிடத் திரளைகள் சம்பந்தப்பட்ட 10 புதியத் திரளைகள் இன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது செயலில் உள்ள திரளைகளின் மொத்த எண்ணிக்கையை 421 ஆகக் கொண்டுவருகிறது.

இன்று, சிலாங்கூரில் நால்வர், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் தலா மூவர், ஜொகூர் மற்றும் பஹாங்கில் இருவர், கிளாந்தான், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒருவர் எனப் 17 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

4,092 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சை பிரிவில் 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 135 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் 2,056, ஜொகூர் 664, கோலாலம்பூர் 481, சரவாக் 270, மலாக்கா 238, சபா 175, பேராக் 163, பினாங்கு 157, நெகிரி செம்பிலான் 100, பஹாங் 78, திரெங்கானு 69, கெடா 51, கிளாந்தான் 48, புத்ராஜெயா 20, லாபுவான் 1.