`ரோஸ்லிசா இப்ராஹிம் ஒரு முஸ்லிம் அல்ல` – நீதிமன்றம் தீர்ப்பு

வேறொரு மத தந்தையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதனால், அப்பெண் ஒரு முஸ்லிம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரோஸ்லிசா இப்ராஹிம், அவரது தந்தை ஒரு முஸ்லீம் என்றபோதிலும், அவரது தாயார் முஸ்லிம் இல்லை, ஒருபோதும் முஸ்லிமாக இருந்ததில்லை என்று ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்குரைஞர் எஸ்தன் பைவா

இன்று, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கியக் குழு, ரோஸ்லிசாவின் மேல்முறையீட்டை விசாரித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் இருந்தே, புத்த மதத்தைச் சார்ந்த தனது தாயால் வளர்க்கப்பட்ட அப்பெண் இஸ்லாத்திற்கு மாறினார் என்பதற்கான எந்த ஆதாரமும் பதிவும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு, ஒரு முஸ்லீமாக பிறந்து, மதத்தை விட்டு வெளியேற விரும்பிய  லீனா ஜாய் வழக்கில் இருந்து வேறுபட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த முறையீட்டிற்கு, இன்று சிலாங்கூர் அரசாங்கம் முதல் பிரதிவாதியாகவும், சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் (ஜாய்ஸ்) இரண்டாவது பிரதிவாதியாகவும் இருந்தன.

2017-ஆம் ஆண்டில், தான் ஒரு முஸ்லிம் அல்ல எனும் அறிவிப்பைப் பெறுவதற்கான தனது ஆரம்ப வழக்கு அனுமதிக்கப்படாததால், ஷா ஆலம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ரோஸ்லிசா மேல்முறையீடு செய்தார்.

ஏப்ரல் 2018-ல், ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.