இன்று 3,847 புதிய நேர்வுகள், 12 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 3,847 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன். சிலாங்கூர் நான்கு இலக்கங்களிலும் (1,481), கோலாலம்பூரில் 402 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 105,629 ஆகும். இது நேற்று 100,000-ஐ தாண்டியது.

இன்றைய உயிரிழப்புகளில், ஜொகூர் மற்றும் சபா தலா மூன்று இறப்புகளையும், கோலாலம்பூர் (2), மலாக்கா (2), சிலாங்கூர் (1), கிளாந்தான் (1) என பதிவு செய்துள்ளன.

இறந்தவர்களில் இளைய வயதினர் 38, மற்றும் மூத்தவர் 84, நால்வர் வெளிநாட்டினர். ஆக, தேசிய இறப்பு எண்ணிக்கை இப்போது 857 ஆக உயர்ந்துள்ளது.

12 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 11 பணியிடம் சார்ந்தத் திரளைகளாகும்.

இன்று, 1,692 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 139 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1481), ஜொகூர் (585), கோலாலம்பூர் (402), மலாக்கா (329), சபா (233), பினாங்கு (211), சரவாக் (185), நெகிரி செம்பிலான் (133), கெடா (64), கிளந்தான் (62), திரெங்கானு (56), பஹாங் (48), பேராக் (36), லாபுவான் (10), புத்ராஜெயா (8), பெர்லிஸ் (4).