கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,100 புதியக் கோவிட் -19 நேர்வுகளும், இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 24 இறப்புக்களும் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“இன்றைய மரணச் சம்பவங்களில், சிலாங்கூரில் ஏழு, சபா, சரவாக் மற்றும் கோலாலம்பூரில் தலா மூன்று, பேராக் மற்றும் ஜொகூரில் இரண்டு, கிளாந்தான், மலாக்கா, கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் ஒன்று எனப் பதிவாகியுள்ளது.
13 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 12 பணியிடம் தொடர்பான திரளைகளாகும்.
இன்று, 2,340 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 134 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று லாபுவானில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் 1,196, ஜொகூர் 490, மலாக்கா 344, கோலாலம்பூர் 295, பினாங்கு 209, சபா 169, நெகிரி செம்பிலான் 104, சரவாக் 84, பேராக் 72, கெடா 37, திரெங்கானு 30, கிளாந்தான் 30, பஹாங் 28, புத்ராஜெயா 8, பெர்லிஸ் 4.