அற்பமான சிக்கல்களை மறந்துவிட்டு, ஆர்.எம்.கே.12-இன் நிழல் கொள்கைகளைக் கட்டமையுங்கள்

விமர்சனம் | 12-வது மலேசியத் திட்டம் (ஆர்.எம்.கே.12), இந்த ஆண்டு 2021 முதல் தொடங்கப்படவுள்ள ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டமாகும். 11-வது மலேசியத் திட்டத்தின் முடிவோடு, 2020 தொலைநோக்குத் திட்டம் கடந்தாண்டு முடிவடைந்தது. இது ஆர்.எம்.கே.12-ஐ ஒரு முக்கியமான வளர்ச்சித் திட்டமாக மாற்றுகிறது.

ஆர்.எம்.கே.12-ஆனது ஓர் அதிகாரபூர்வமான அரசாங்கத்தால், நேர்மையுடன் வடிவமைக்கப்பட வேண்டும், தயாரிக்கப்பட வேண்டும், கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும்.

அவசரகாலத்தில், அதிகாரத்தில் இருக்கப் போராடி வரும் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பிஎன்) சிறுபான்மை அரசாங்கத்திற்கு ஆர்.எம்.கே.12-ஐ வழங்குவதற்கான தார்மீக அதிகாரம் இல்லை.

மேலும், ஆர்.எம்.கே.12, விவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்ற நிலை இடைநிறுத்தப்பட்டுள்ளது, அதாவது தற்போதைய பி.என். அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக, ஆர்.எம்.கே.12-ன் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தைத் தியாகம் செய்கிறது.

நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்த அவசரகால அரசாங்கத்திற்கு, ஆர்.எம்.கே.12 ஒப்புதல் அளிக்க எந்த அதிகாரமும் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இது போன்ற சூழ்நிலையில், அற்பமான பிரச்சினைகளுடன் நேரத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியது, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) முக்கியத் தலைவர்களின் பொறுப்பாகும்.

குறைந்தபட்சம், ஆர்.எம்.கே.12-இன் நிழல் கொள்கைகளை வகுக்க, அவர்களின் பொருளாதார வல்லுனர்களை அணிதிரட்ட பி.எச். இப்போது தயாராக வேண்டும்.

இன்று நம் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பொருளாதார பிரச்சினைகள் ஒரு முக்கியமான பிரச்சினை.

பி.எச். தலைவர்களின் முக்கியப் பணி 32 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகும்.

பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பிஎன் அரசாங்கத்தின் மீது மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிகழ்வுகளைச் சமூக ஊடகங்களில் கண்ட பி.எச். தலைவர்கள் கால்களை ஆட்டிக்கொண்டு, மகிழ்ச்சியில் திளைக்க முடியாது.

முஹைதீன் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் விமர்சனங்களும் ஏளனங்களும் பி.என். அவசரகால அரசாங்கத்தை எளிதில் கவிழ்க்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பி.எச். அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதை முன்வைக்க வேண்டும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வேலையின்மை பிரச்சினையைச் சமாளிக்க, புதிய வேலை வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பது சிந்திக்க வேண்டும்.

இதுதான் நேரம்

இது எளிதானது அல்ல. பி.எச்.-க்குத் தூண்டுதலையும் ஆலோசனையையும் வழங்க சமூகப்-பொருளாதாரத் துறையில் ஒரு சிந்தனையாளர் குழுவை உருவாக்க வேண்டும்.

புதிய பி.என் அரசாங்கத்தின் ஆட்சி கவிழும்வரை, மக்களின் சமூகப்-பொருளாதார வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதை ஒத்திவைக்கத் தேவையில்லை.

வல்லுனர்களையும், பல்கலைக்கழக அறிவுஜீவிகளையும் ஓய்வு பெற்றவர்களையும் கூட்டாக நாட்டைக் காப்பாற்ற அழைக்க வேண்டிய நேரம் இது.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வதில் மட்டும் அதிக ஆர்வம் காட்டாதீர்கள், நீங்கள் அதிகாரத்தைப் பெற்றவுடன் எந்தவொருத் திட்டமும் இருக்காது, செயல்படுத்த முதிர்ச்சியுள்ள மற்றும் விரிவான கொள்கையும் இருக்காது.

பிறகு, லங்காவியைச் சேர்ந்த பிரதமர், வெற்றி பெற்று அரசாங்கமாக ஆனபோது ஆச்சரியப்பட்டதைப் போல் அது இருக்கும்.

14-வது பொதுத் தேர்தலின் போது, பி.எச். கோடிட்டு, சிறப்பித்துக் காட்டியத் தேர்தல் அறிக்கையை, வேண்டுமென்றே மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை விதைத்தனர் என்றார்.

பின்னர், அந்த ஏழாவது பிரதமர் பி.எச். தேர்தல் அறிக்கை ஒரு புனித நூல் அல்ல என்றார். இதன் பொருள், அறிக்கையின் வாக்குறுதிகளை உடைத்தெறிய முடியும். பி.எச். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இது ஆரம்பக் காரணங்களில் ஒன்றாகும்.

ஆகையால், பி.எச்.-இன் முக்கியத் தலைவர்கள், மலேசியாவிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, மற்றவற்றுடன், ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க இனி தாமதிக்கக்கூடாது; நிதி மதிப்பீட்டை மேம்படுத்துதல்; அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களை உருவாக்குதல்; நாட்டின் முக்கியப் பொருட்களின் விலையை மீட்டெடுங்கள்; வறுமையைக் குறைத்தல்; பணக்கார-ஏழை இடைவெளியைக் கட்டுப்படுத்துதல்; மற்றும் தீபகற்பத்திற்கும் சபா-சரவாக் இடையிலான முன்னேற்ற இடைவெளியையும் கட்டுப்படுத்த வேண்டும்.

பி.எச். சாதாரண மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதார வாழ்க்கையையும் மீட்டெடுக்க முடியும். நாடு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்க முடிந்தால், பி.எச்.-க்கு அதிகாரத்தையும் ஆணையையும் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு எளிதில் ஒரு சாத்தியமாக மாறும்.


ஹசான் அப்துல் கரீம், பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்