நேற்று, பிரதமர் அலுவலகம் அறிவித்த தேசிய வேலைவாய்ப்பு மன்றத்தில் (என்.இ.சி.), மனிதவள அமைச்சு (கே.எஸ்.எம்) மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக நியமிக்காத அரசாங்கத்தின் முடிவை டி.ஏ.பி. கேள்வி எழுப்பியது.
டிஏபி தொழிலாளர் பிரிவின் தலைவர் ஏ சிவநேசன், மலேசியாவில் சுமார் 15 மில்லியன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த என்.இ.சி.-யில் கே.எஸ்.எம். பிரதிநிதி இல்லை என்பது இதுவே முதல் முறை என்றார்.
“எந்தவொரு தொழிலாளர் பிரச்சினைக்கும் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் கே.எஸ்.எம்.-ஐ ஈடுபடுத்த வேண்டும்.
“பிரதமர் அலுவலகம், கல்வியாளர்கள் மற்றும் முதலாளிகள், மனிதவள அமைச்சையும் தொழிலாளர் பிரதிநிதியான எம்.டி.யூ.சி.-யையும் விட, கோவிட் -19 தொற்று பரவலுக்குப் பலியான தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிகம் புரிந்துகொண்டுள்ளனர் என்பதுதான் இதன்பொருள்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நிறுவனத் துறைகள், தொழிற்துறைகள் மற்றும் கல்வித் துறைகள் சார்ந்த 10 நபர்களை, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் மொஹமட் ஜுகி அலி தலைமையிலான என்.இ.சி. உறுப்பினர்களாக நியமித்தது குறித்து கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
தொழில்துறை தேவையின் அடிப்படையில், மனித மூலதனத்துடன் பொருந்தக்கூடிய நோக்கத்தை அடைவதற்கு வேலையின்மை மற்றும் வேலை பொருத்தமின்மை தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்த மன்றம் நிறுவப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பினாலும், முதலீடுகளினாலும், 2021-ஆம் ஆண்டில் 160,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கே.எஸ்.எம். மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை ஈடுபடுத்தாமல் என்.இ.சி. உறுப்பினர்களை நியமிப்பது ‘ஊனமானது’ என்று சிவநேசன் விவரித்தார், மன்றத்தின் நடவடிக்கைகள் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
“எனவே, என்.இ.சி.-யில் ‘பங்குதாரர்கள்’ யாரும் விடுபடாமல் இருக்க, என்.இ.சி.-யை மறுசீரமைக்க வேண்டுமென, டி.ஏ.பி. பிரதமர் அலுவலகத்தை வலியுறுத்துகிறது,” என்று தொழிலாளர் சட்ட வழக்கறிஞருமான, சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறினார்.
என்.இ.சி.-இல் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நிறுவன, தொழில் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த 10 நபர்கள் பின்வருமாறு :-
அஹ்மட் நிஸாம் சல்லே, பெட்ரோனாஸ் தலைவர் & பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்
ஷாரில் ரிட்ஸா ரிட்ஸுவான், கஸானா நேஷனல் நிர்வாக இயக்குநர்
தெங்கு முஹம்மது தௌஃபிக், பெட்ரோனாஸின் தலைமை நிர்வாக அதிகாரி
ஜெஃப்ரி சலீம் டேவிட்சன், சைம் டார்பியின் தலைமை நிர்வாக அதிகாரி
டாக்டர் சையத் உசேன் பின் சையத் ஹுஸ்மான், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர்
கே இராமன், மலேசியாவின் மைக்ரோசாப்ட் நிர்வாக இயக்குநர்
சீ ஹோங் லீ, இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் (மலேசியா) நிர்வாக இயக்குநர்
சீயன் கோ,
கிராப்
மலேசியாவின் நிர்வாக இயக்குநர்மைக்கேல் காங் ஹுவா கியோங், மலேசியாவின் சிறுவணிகர் சங்கத்தின் தேசியத் தலைவர்
சோ தியான் லாய், மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (எஃப்.எம்.எம்.) தலைவர்