கிளாந்தான், மச்சாங்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள மாணவர்களை உள்ளடக்கிய ‘பங்கால் சங்கோங்’ திரளையில், கோவிட் -19 தொற்றின் நேர்மறையான பாதிப்புகள் இன்று 64-காக அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர், டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், பள்ளியின் ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மொத்தம் 259 நபர்கள் திரையிடல் பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
“இன்றுவரை, அவர்களில் மொத்தம் 64 பேர் (ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட) நேர்மறையானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறையும், கிளாந்தான் கல்வி இலாகாவும் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளன, (மாணவர்கள் பரீட்சைக்கு) எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடரும்,” என்று அவர், இன்று கிளாந்தான் மாநிலப் பாதுகாப்பு செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு, ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கோவிட் -19 தொற்று கண்டுள்ள அந்த 41 மாணவர்களும், எஸ்.பி.எம் தேர்வைத் தனித்தனியாக எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று இசானி கூறினார்.
பெரும்பாலான மாணவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.