சிலாங்கூர், கே.எல்., ஜொகூர், பினாங்கில் மார்ச் 4 வரை பி.கே.பி.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 4 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி கூறுகையில், பி.கே.பி. அமல்படுத்தப்பட்ட பிற மாநிலங்களில், நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.யும், பெர்லிஸில் மீட்புநிலை பி.கே.பி.யும் அமலுக்கு வரும் என்றார்.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில், சுகாதார அமைச்சு இடர் மதிப்பீட்டை முன்வைத்த பின்னர், பி.கே.பி. நிலையில் மாற்றங்கள் முடிவு செய்யப்பட்டன என்றார் அவர்.

“பி.கே.பி. 2.0 செயல்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் ஐந்தாவது வாரம் தொடங்கி, பெரும்பாலான மாநிலங்களில் நேர்வுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

“இருப்பினும், சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன,” என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதேசமயம், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் பயணத் தடை நீக்கப்பட்டதாகவும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

  • பெர்னாமா