பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம் ஏ தினகரனை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளதாக, கட்சியின் சில உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை, சாட்சியமளிக்க எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவரைக் கைது செய்ததாக மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டது.
பேராக் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ வேண்டும் என்ற காரணத்திற்காக தினகரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், எம்.ஏ.சி.சி. மூத்த அதிகாரிகளை இதுவரைத் தொடர்புகொள்ள முடியாததால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்னதாக, இந்த வழக்கோடு தொடர்புடைய வாகனம் தொடர்பான விசாரணையில், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு எம்.ஏ.சி.சி. சென்றதாகவும் மலேசியாகினி-க்குத் தகவல் வந்துள்ளது.
மேலும் தகவலுக்கு, எம்.ஏ.சி.சி. மற்றும் பேராக் பி.கே.ஆர். தலைவர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் முபாரக்கை மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது.