`அம்னோ திபிஎம் பதவியை நிராகரிக்கிறது, பிஎன் உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது

அவசரப் பிரகடனம் முடிந்தவுடன் பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி (பி.என்) உடனான ஒத்துழைப்பை நிறுத்த அம்னோ முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆதாரங்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை பஹாங்கில் உள்ள ஜண்டா பாய்க்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் (எம்.தி.), அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இந்த முடிவை எடுத்துள்ளார்.

“சுகாதார அவசரநிலை” முடிந்தவுடன் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது.

“துணைப் பிரதமர் பதவி தொடர்பான எந்த அழைப்பையும் அம்னோ ஏற்காது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பெர்சத்து உடனான அம்னோவின் உறவு சிக்கலானது மட்டுமல்லாமல் எந்நேரத்திலும் பிளவுபடக்கூடியது.

ஜாஹித் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பை நிராகரித்தார்

இதற்கிடையில், பெயரிட மறுத்த மற்றொரு ஆதாரம், பெர்சத்து மற்றும் பி.என்.-உடனான ஒத்துழைப்பை நிராகரிக்க, அஹ்மத் ஜாஹித் “தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்” என்று கூறினார்.

கடந்த சபா மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சூத்திரத்தின்படி பெரும்பான்மையான எம்.தி. உறுப்பினர்கள், கட்சியி பிஎன்-இல் இணைவதை ஏற்றுக் கொண்டதாக அந்த எம்.தி. உறுப்பினர் கூறினார்.

இருப்பினும், அஹ்மத் ஜாஹித் இந்தத் திட்டத்தை நிராகரித்தார்.

அம்னோவுக்கான துணைப் பிரதமர் பதவியையும் ஜாஹித் நிராகரித்ததாக அவர் மேலும் சொன்னார்.