பி.என். தேர்தல் கூட்டத்திற்கு அஸ்மின் தலைமை தாங்கினார்

நேற்று இரவு புத்ராஜெயாவில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி தலைமையில், தேசியக் கூட்டணி (பி.என்.) தேர்தல் கூட்டத்தை நடத்தியது.

பி.என். கட்சிகளின் அனைத்து தேர்தல் இயக்குநர்கள் வருகையுடன் இந்தச் சந்திப்பு நடந்தது என்று அஸ்மின் கூறினார்.

“தேர்தல் பணிகள் மூலம், அப்படியே மக்களின் ஆதரவை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்தக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தின் மூலம், பாஸ் கட்சியைப் பிரதிநிதித்து, கெடா மந்திரி பெசார் மொஹமட் சனுசி முகமட் நோர் கலந்துகொண்டார்.

பி.என். பெர்சத்து, பாஸ், கெராக்கான், ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி ஆகியவற்றால் ஆன ஒரு கூட்டணி, அக்கூடடணிக்கு பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஆதரவும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மாநில அளவில் தேர்தல் கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்று அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருக்கும் அஸ்மின் கூறினார்.

“(இது) பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளைத் தழுவும் பி.என்.-இன் உருவமைப்பைக் காட்டும்,” என்று அவர் கூறினார்.