தடுப்பூசி வரவுக்குப் பின், பயணக் கட்டுப்பாடுகள் தேவையில்லை

நாட்டில், கோவிட் -19 தடுப்பூசி திட்ட அமலாக்கம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது.

தடுப்பூசி போடத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொருளாதாரத் துறையை முழுமையாகத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, அரசாங்கம் இனி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) செயல்படுத்த தேவையில்லை என மலேசிய அறிவியல் கல்விக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் மேடலைன் பெர்மா கூறினார்.

“இதற்கு முன்னர் அரசாங்கம் பி.கே.பியை நடைமுறைப்படுத்தியபோது, ​​அந்த நேரத்தில் பொருளாதாரம் 17 விழுக்காட்டுக்கும் அதிகமாக சுருங்கியதைக் கண்டோம், நமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தடுப்பூசி எதுவும் இல்லை… சமூக இடைவெளி, நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன்.

“ஆனால் இன்று, தடுப்பூசி மூலம், பொருளாதார அடிப்படையில், நமக்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் தேவையில்லை, அதைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு இனி வேறு எந்த காரணமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

நேற்றிரவு கோலாலம்பூரில் நடந்த, பெர்னாமா டிவியின் ‘ருவாங் பிச்சாரா’ நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட மேடலைன், நாட்டில் தடுப்பூசி இருந்தபோதிலும், முக்கியமானது என்னவென்றால், மக்கள் தொடர்ந்து செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும்; மேலும் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க, தங்களை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில், நாட்டை ஆளும் அரசாங்கத்தின், இந்த ஓராண்டு அக்கறை குறித்து பேசிய அரசியல் மற்றும் சட்ட ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் அப்துல் ஹலீம் சிடெக் கூறுகையில், அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் துன்பங்கள் குறித்த அரசாங்கத்தின் அக்கறையை நிரூபித்தன, குறிப்பாக நாடு கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது என்றார்.

“உண்மையில், தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, தற்போதைய அரசாங்கத்தை முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, ஏனெனில் மலேசியாவின் வரலாற்றில், கோவிட்-19 உடனான மிகப்பெரிய சவாலை எதிர்கொண்ட அதே நேரத்தில், ஓர் அரசாங்கம் நாட்டு மக்கள், பொருளாதாரம் மற்றும் பல பிரச்சனைகளை கையாண்டது இதுவே முதல் முறை.

“இதற்கு ஒரு பெரிய கவனம் தேவை, எதிர்க்கட்சி அல்லது அரசு, அரசுத் துறைகள் அல்லது தனியார் துறையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரின் உதவியும் ஆதரவும் தேவை … இந்த அரசாங்கம் அக்கறையுள்ள அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது, அதற்குக் காரணம் மக்களுக்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களும் நிகழ்ச்சிகலுமே,” என்றார் அவர்.

– பெர்னாமா