தடுப்பூசி : என்.பி.ஆர்.ஏ. 300 கேள்விகளைக் கேட்டது – கைரி

நாட்டில், கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிப்பதற்குப் பொறுப்பான தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.), அதன் தரம் மற்றும் பாதுகாப்பில் மிகவும் கவனமாக உள்ளது, பிற சர்வதேச ஒழுங்குமுறை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் ‘கண்டிப்பான’ மற்றும் கடுமையான ஒரு தடுப்பூசி நிறுவனமாக கருதப்படுகிறது.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், தடுப்பூசி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நபராக, இந்த விஷயம் தொடர்பில் அவர்கள் தன்னையும் அணுகியதாகக் கூறினார்.

“நான் இந்த நிறுவனங்களுடன் கலந்தாலோசித்தேன், அவர்கள் என்னிடம் திரும்பி வந்து, ‘உங்கள் என்.பி.ஆர்.ஏ.-தான் உலகின் மிகக் கடுமையானது, மிகவும் கண்டிப்பானது (உறுதியானது)’, அவர்கள் (என்.பி.ஆர்.ஏ) ஒன்று அல்லது இரண்டு கேள்விகளைக் கேட்கவில்லை, மாறாக, தொழில்நுட்பக் கேள்விகள் உட்பட 300 கேள்விகளைக் கேட்டனர்,” என்று இரஷ்யா சொன்னதாக அவர் கூறினார்.

‘கோவிட் -19 தடுப்பூசி : எடுக்கலாமா? கூடாதா?’ என்ற தலைப்பில், மலேசிய முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் (பிபிஐஎம்) முகநூல் நேரடி விவாதத்தில், விருந்தினராக கலந்துகொண்ட கைரி இவ்வாறு கூறினார்.

அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கும் கைய்ரி, அரசியல்வாதிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறாத ஒரு சுயாதீன அமைப்பு இது, எடுத்துக்காட்டாக, தடுப்பூசி ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதில் என்றும் கூறினார்.

ஏனென்றால், மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையைப் பற்றி என்.பி.ஆர்.ஏ. மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்று கைரி கூறினார்.

“எந்தவொரு மருத்துவத் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் திருப்தி அடையாத வரை, எந்தவொரு மருந்துகளையும் நம் நாட்டிற்குள் என்.பி.ஆர்.ஏ. அனுமதிக்காது.

“எனவே, என்.பி.ஆர்.ஏ.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது,” என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியா முதல் கோவிட் -19 தடுப்பூசியை, ஃபைசர்-பயோஎன்டெக் வகையிலிருந்து 312,390 அளவுகளைப் பெற்றது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி விநியோகிக்கும் மையமாக இருக்கும் சிங்கப்பூரிலிருந்து இந்தத் தடுப்பூசி கொண்டு வரப்பட்டது.

சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகள் நாளை சீனாவின், பெய்ஜிங்கில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • பெர்னாமா