தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்த இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்களிடமிருந்து பிரதமர் முஹைதீன் யாசின் பிரமாண பத்திரத்தைப் (எஸ்டி) பெற்றார்.
முஹைதீனின் கூற்றுப்படி, அந்த இரு எம்.பி.க்களும் ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர், லாரி சங் வீ ஷியென் மற்றும் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங் ஷியாவ் யூன் ஆகியோர்.
“அவர்களின் இந்த ஆதரவு நிச்சயமாக பி.என். அரசாங்கத்தைப் பலப்படுத்தும்; கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதற்கும், நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இது மேலும் வலுவூட்டும்,” என்று பெர்சத்து தலைவருமான முஹிதின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்ங் சரவாக் பி.கே.ஆர். தலைவர் மற்றும் கட்சியின் பிற பதவிகளை இராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
இதே நடவடிக்கை, ஸ்டீவன் சோங்கும் எடுத்துள்ளார்.
இதனை, முன்னாள் பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருதீனின் அரசியல் செயலாளர், ஹிஸ்வான் அஹ்மத் தெரிவித்தார்.