‘1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சமரசமின்றி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்’

1எம்டிபி ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவதில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.

டெலாய்ட்டுடனான (Deloitte) சமீபத்தியத் தீர்வுகள், அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்ற நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்,  1எம்டிபி மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடரும் முயற்சியில் அரசாங்கம் பின்வாங்காது என்று கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவில் ஒரு தணிக்கை நிறுவனமான டெலோயிட் உடனான தீர்வு 1எம்டிபி தொடர்பான மிகப் பெரிய தீர்வாகும், அங்கு 2011-2014 காலகட்டத்தில் 1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.இ. இண்டர்நேஷனல் சென். பெர். (SRC International Sdn Bhd) கணக்குகளைத் தணிக்கை செய்யும் போது, தங்களது நம்பகமான கடமைகள் தொடர்பான அனைத்து உரிமைகோரல்களையும் தீர்க்க RM324 மில்லியன் தீர்வுக்கு டெலாய்ட் ஒப்புக்கொண்டது. .

“இந்தச் சமீபத்தியத் தீர்வு, மலேசியர்களுக்கு நன்மை பயக்கும். நீதிமன்ற அமைப்பின் மூலம் இந்த விஷயத்தைத் தீர்ப்பதற்கு நிறைய நேரமும் நிதியும் தேவை.

“இந்தத் தீர்வு மூலம், தொகையைச் செலுத்துவது விரைவுபடுத்தப்படும், மேலும் இது நீதிமன்ற முறைமையின் மூலம் தாமதமாகாது,” என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

1எம்டிபி-இன் நிலுவைக் கடன்களைச் செலுத்தவும் இந்தத் தீர்வுத் தொகையைப் பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சர் கூறினார்.

இந்த உலகளாவியத் தீர்வு, 1எம்டிபி ஊழல் தொடர்பாக மலேசியா தேடிவரும் ஜோ லோ, ஜாஸ்மின் லூ மற்றும் அவர்கள் தொடர்புடைய தரப்பினர் மீதான மலேசியாவின் கோரிக்கைகளைப் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா