இன்று 2,063 புதிய நோய்த்தொற்றுகள், 5 மரணங்கள் பதிவாகின

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,063 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பினாங்கு மற்றும் சரவாக்கில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பினாங்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று 337 புதிய பாதிப்புகளையும், சரவாக் 361 பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளன.

இன்று 2,922 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 99 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் 630, சரவாக் 361, பினாங்கு 337, ஜொகூர் 255, கோலாலம்பூர் 120, பேராக் 101, சபா 78, கிளாந்தான் 44, பஹாங் 13, கெடா 12, திரெங்கானு 10, புத்ராஜெயா 7, மலாக்கா 3, பெர்லிஸ் 1.

இன்று 14  புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 12 பணியிடம் சார்ந்தவை.