ஆய்வாளர் : நாட்டின் அரசியல் நிலைமை தொடர்ந்து ‘கொதிநிலையில்’

சமீப காலமாக, மக்கள் பிரதிநிதிகளிடையிலான கட்சி தாவும் நிகழ்வுகள் அரசியல் போர்களின் தொடர்ச்சியான சுழற்சிக்குப் பங்களிப்பதாகத் தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பெரும்பான்மை இடங்களின் உறுதியற்ற தன்மை, கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நிலையற்றதாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தன்மை காரணமாக ஒருவருக்கொருவர் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு அது வழிவகுக்கும்.

கட்சி தாவுதல் அல்லது ஆதரவுகளை இழுப்பது போன்ற நிகழ்வுகள் இரு தரப்பிலும் நடக்கிறது.

“இதற்கு முன்னர், ஸ்ரீ காடிங் எம்.பி. (ஷாருதீன் சல்லே) பெர்சத்துவை விட்டு வெளியேறினார், மேலும் மூன்று தேசிய முன்னணி எம்.பி.க்கள் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர்.

பேராசிரியர் மஸ்லான் அலி

“பின்னர், அண்மையில் இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்கள் கட்சியை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணிக்குத் தங்கள் ஆதரவை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது, இது நாட்டின் அரசியல் நிலைமையைப் பாதிக்கும் என்றும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

மலேசிய அரசியலின் தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவுதலின் நேரடி தாக்கம் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, ​​மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பெர்டானா பள்ளியின் (Sekolah Perdana Universiti Teknologi Malaysia) மூத்த விரிவுரையாளரான அவர் இவ்வாறு கூறினார்.

சில சமீபத்திய மாற்றங்களைத் தொடர்ந்து, இரு தொகுதிகளையும் சார்ந்த உறுப்பினர்களால் இது மீண்டும் நிகழும் சாத்தியமுண்டு என்று மஸ்லான் மேலும் கூறினார்.

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தாவும் வாய்ப்பு உள்ளதா? இது சாத்தியமற்றது அல்ல, மேலும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்ள எண்ணும் சில தேசிய முன்னணி எம்.பி.க்களும் இருப்பார்கள்.

“இந்தச் சாத்தியங்கள் அனைத்தும் நாட்டின் அரசியலைத் தொடர்ந்து வண்ணமயமாக்கும், அரசியல் நிலைமை தொடர்ந்து கொதிநிலையில் இருக்கும்,” என்றும் அவர் விளக்கினார்.

இதற்கிடையில், அரசியல் அறிவியல் விரிவுரையாளரான முஹம்மது ஆரிஃப் அசிருல் அட்னான், தற்போதையப் பிரச்சினைகள், மலேசியாவில் அரசியல் உறுதியற்ற தன்மை எப்படி இருக்கிறது என்பதற்கான அடையாளம் என்று கருதுகிறார்.

குறுகிய காலத்திற்கு இது நல்லது

இந்நிலைமை ஜனநாயக நடைமுறைகளின் தொடர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றார் அவர்.

பேராசிரியர் ருஸ்டி உமார்

“மலேசியாவில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பதை இது நியாயப்படுத்துகிறது, குறிப்பாக இப்போது நாம் ஒரு பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம், இது நாட்டின் மற்றும் மக்களின் அனைத்து அம்சங்களையும் மிகவும் பாதிக்கிறது.

“கட்சித் தாவும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தால், மக்கள் பிரதிநிதிகள் வெறும் ‘அரசியல் செய்பவர்கள்’ என்பதையும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் வாக்காளர்கள் வழங்கிய ஆணையைப் புறக்கணிப்பதாகவும் காட்டும்.

“மலேசியா வலுவான கட்சி அரசியல் விழுமியங்களைக் கொண்டிருப்பதை நாம் அறிவோம், கட்சி அடிப்படையிலேயே தேர்வுசெய்து, ஒரு சராசரி நபர் வாக்களிக்கிறார்.

“இது தொடர்ந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கு, குறிப்பாக தேசிய மட்டத்தில் இது எதிர்மறையான பொது உணர்வை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான ருஸ்டி உமர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்த சமூகத்தின் தார்மீகப் பார்வை பாதிக்கப்படும், அதோடுமட்டுமின்றி சிலர் மரியாதையையும் இழக்க நேரிடும் என்று கூறினார்.

“எதிர்க்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நிலைமை அரசாங்கத்திற்கு குதித்தால், நேர்மறையான விளைவு என்னவென்றால், அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நம்பப்பட்டவர்கள்.

“தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் இந்த மக்கள் பிரதிநிதிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர், இதனால் அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்த ஆதரவளிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

“ஆனால் நினைவில் கொள்ளுங்கள், குறுகிய காலத்திற்கு இது அரசாங்கத்தின் பிழைப்புக்குத், தேசிய முன்னணிக்கு நல்லது. ஆனால் நீண்ட காலத்திற்கு, இது முழு உத்தரவாதத்தையும் அளிக்காது, மேலும் நிலையற்ற நிலைமைகளுக்கும் வழிவகுக்கும்.

“கட்சி தாவும் இந்த நடைமுறையை நாம் விரும்பவில்லை, இஸ்லாத்தில் கூட இது கூறப்பட்டுள்ளது. இது ஒரு எதிர்மறையான கருத்தை அளிக்கிறது, மேலும் மக்களின் நலன்களைக் கவனிப்பதை விட அரசியல்வாதிகள் அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.